17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழுது நீக்க நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீர் தீவிபத்து

பழுது நீக்க நிறுத்தப்பட்டிருந்த காரில் திடீர் தீவிபத்து

எழுதியவர்: mohan June 19, 2020, 12:14 pm

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவில் உள்ள தியேட்டர் அருகில் உள்ள கார் ஒரு பழுது பார்க்கும் நிலையத்தில் நேற்று மாலை காரில் இருந்து புகை வந்தது. தீயானது திடீரென மளமளவென எரிய ஆரம்பித்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் மதுரை  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் மளமளவென எரிந்து கொண்டிருந்த காரின் தீயை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. முதற்கட்ட விசாரணையில் கடந்த மூன்று மாதங்களாக அதே இடத்தில் நிற்பதாகவும் காரில் இருந்து வெப்பம் காரணமாக கேஸ் கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.  மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!