17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்….

நெல்லையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்….

எழுதியவர்: ஆசிரியர் June 18, 2020, 10:38 pm

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லை நுழைவு பகுதியான கங்கை கொண்டான் வாகன சோதனை சாவடியில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திற்கு சமீபகாலமாக வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக நெல்லையில் கொரனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் நெல்லை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை , செங்கல்பட்டு, மகாராஷ்டிரா, மும்பை போன்ற இடங்களில் இருந்து நெல்லைக்கு வருபவர்களை சோதனை சாவடியில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நோய் அறிகுறியுடன் வருபவர்களை தனிமைப்படுத்த கங்கை கொண்டான் சிப்காட்டில் உள்ள இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் நோய் தொற்றை உறுதி செய்த பின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர். கங்கை கொண்டான் வாகன சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சரிபார்த்த பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.

போலி இ-பாஸ் மூலம் யாரும் வருகிறார்களா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.போலி இ-பாஸ் மூலம் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!