18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் இருவருக்கு கொரோனா.. தொடர்புடையவர்களுக்கு சோதனை..

இராஜபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் இருவருக்கு கொரோனா.. தொடர்புடையவர்களுக்கு சோதனை..

எழுதியவர்: ஆசிரியர் June 18, 2020, 6:55 pm

இராஜபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வரக்கூடிய சுதாகர் மற்றும் காளி ஆகிய இருவரும் இராஜபாளையம் பகுதிகளில் கொரோளா தொற்று உறுதி செய்யப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் வீடு வீடாகச் சென்று சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது சென்னையில் சொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இராஜபாளையம் நகராட்சி ஊழியர் பல சென்னை சென்றனர்.

இதில் இவர் இருவரும் கடந்த 20 தினங்களுக்கு முன்பு சென்னையில் பணியாற்றி நேற்று முன்தினம் வீடு திரும்பிய நிலையில் இவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்தபோது இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதில் காளி என்பவர் தனியார் மருத்துவமனையிலும் மற்றொருவர் விருதுநகரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை சந்தித்ததாக நான்கு தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது மேலும் இராஜபாளையம் ஐஎன்டியுசி நகர் பகுதியில் இருக்கக்கூடிய சுகாதார ஆய்வாளர் காளி இவர் வசிக்கும் பகுதியில் நகராட்சி சார்பில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் ஆகையால் அப்பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!