18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது…

இராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது…

எழுதியவர்: ஆசிரியர் June 18, 2020, 6:45 pm

இராஜபாளையம் அருகே ரெட்டியபட்டி பகுதியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ரெட்டியபட்டி பகுதியில் 16 வயது சிறுமி 2 பேர் நேற்று இரவில் காணவில்லை என கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மற்றும் பொண்ணு பாண்டியன் என்ற வாலிபர்கள் இரண்டு சிறுமிகளிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்ததாகவும், இதற்கு உடந்தையாக சங்கிலியின் தாயார் சீனியம்மாள் இருந்ததும் விசாரனையில் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 2 சிறுமிகளை மீட்ட போலீசார் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!