18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

நிலக்கோட்டையில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

எழுதியவர்: mohan June 18, 2020, 12:04 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் உள்ள சித்தர்கள்நத்தம் உழவர் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், குல்லலக்குண்டு உழவர் உற்பத்தியாளர் சங்கத்திற்கும் தமிழக அரசின் சார்பில் மானியத்துடன் கூடிய உழவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் விவசாய உழவிற்கு பயன்படக்கூடிய உபகரண பொருட்கள் வழங்கும் விழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் . தேன்மொழி சேகர் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் நம்பி சோபனா வரவேற்றுப் பேசினார்.விழாவில் சுமார் 14 லட்சத்திற்கு உரிய விவசாய உழவு சாதனமான டிராக்டர் மற்றும் இதர உபகரணங்கள் விவசாய உழவர் உற்பத்தியாளர் சங்கத்திற்கு மானியத்துடன் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சேகர், வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, வேளாண்மை உதவி அலுவலர் பாண்டியம்மாள், தோட்டக்கலை உதவி அலுவலர் சுப்பிரமணியம் , முருகன், முத்துராமன், தங்கமணி, சிவஞானபுரம் ஒன்றிய கவுன்சிலர் முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!