18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவியின் சமூக சேவை

மாணவியின் சமூக சேவை

எழுதியவர்: mohan June 17, 2020, 4:51 pm

மதுரையைச் சேர்ந்த மாணவி நேத்ரா, ஐ.நா வழங்கிய பரிசுத் தொகையான ரூ. 1 லட்சத்தையும் ஏழை மக்களுக்கு பொருட்களாக வழங்கினார்.மதுரை அண்ணாநகர் நெல்லை வீதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் முடித்திருத்தகம் வைத்து நடத்தி வருகிறார்.இவர் தன் மகள் படிப்புச் செலவுக்காக ரூ.5 லட்சம் வரை சேமித்து வைத்திருந்தார்.அத் தொகையை, மாணவி நேத்ராவின் ஆலோசணையின் பேரில், கொரோனா காலத்தில் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருட்களை வாங்கி வழங்கியுள்ளனர்.இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும், மாணவி நேத்ராவின் செயலை பாராட்டி செய்தி வெளியிடப்பட்டது.இதை அறிந்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் மாணவியை பாராட்டினர்.இதையடுத்து ஐ.நா. இவரை பாராட்டி, ஏழை மக்களின் நல்லெண்ண தூதுவராக நியமித்து ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையை வழங்கியது.இத் தொகையையும் மாணவி நேத்ரா தான் வைத்துக் கொள்ளாமல், மதுரை ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் ரூ.1 லட்சத்துக்கும் பொருட்களை வாங்கி ஏழை மக்களுக்கு, மதுரை மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கினார், மதுரையைச் சேர்ந்த மாணவி நேத்ரா.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!