17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேமாத்தூர் ஊராட்சியில் 900  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம். எல். ஏ. வழங்கினார்

மேமாத்தூர் ஊராட்சியில் 900  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம். எல். ஏ. வழங்கினார்

எழுதியவர்: mohan June 17, 2020, 10:14 am

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  மேமாத்தூர்   ஊராட்சியில் 900 -க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்.செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேமாத்தூர் ஊராட்சியில் 900 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வேலைவாய்ப்பு இன்றி இருந்து வரும் நிலையில், பூம்புகார் சட்ட மன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் தனது சொந்த நிதியில் இருந்து 900 -க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு 5 கிலோஅரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை  வழங்கி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், செம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கபடிபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன், மேமாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஸ்டாலின், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் அன்பழகன், ரங்கபாஷ்யம் உள்ளிட்ட  கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!