17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் மீனவர் மண்டபத்தில் மர்மக் கொலை?

ராமேஸ்வரம் மீனவர் மண்டபத்தில் மர்மக் கொலை?

எழுதியவர்: mohan June 17, 2020, 9:49 am

ராமேஸ்வரம் வேர்க்கோடு செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 38. மீன்பிடி தொழிலாளியான இவர், மண்டபம் பகுதியில் தொழிலுக்குச் சென்று வந்தார். இன்று தொழிலுக்குச் செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றிரவு மண்டபம் வந்தார். மண்டபம் ரயில்வே கேட் பகுதியில் இரவில் பூட்டிய கடை முன் தூங்கினார். இந்நிலையில் இன்று (17.6.2020) அதிகாலை அவர் தலையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலை மண்டபம் போலீசார் கைப்பற்றி கொலைக்காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!