17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் ஹமீதியா பள்ளி மற்றும் செய்யது ஹமீதா கலை கல்லூரி மாணவர்கள் இணைந்து கலங்கரைவிளக்கம் பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்..

கீழக்கரையில் ஹமீதியா பள்ளி மற்றும் செய்யது ஹமீதா கலை கல்லூரி மாணவர்கள் இணைந்து கலங்கரைவிளக்கம் பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்..

எழுதியவர்: ஆசிரியர் August 17, 2017, 12:44 pm

கீழக்கரையில் இன்று (17-08-2017) ஹமீதியா ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஹமீதா கலை கல்லூரி மாணவர்கள் இணைந்து கலங்கரைவிளக்கம் பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் கீழக்கரை நகராட்சி ஆணையர் வசந்தி மற்றும் நகராட்சி ஆய்வாளர் திண்ணையிர மூர்த்தி மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்தப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்நு கொண்டார்கள். இந்த சுகாதாரப் பணியில் பங்கேற்ற மாணவர்களுக்கு குளிர்பானம் மற்றும் குடிதண்ணீர், சமூக ஆர்வலர் SS.மீரான் என்பவரால் வழங்கப்பட்டது.

அதேபோல் கீழக்கரை நகர் SDPI.கட்சியின் சார்பாக நிர்வாகிகள் மாணவர்களுக்கு தண்ணீர் பாக்கெட் வழங்கினார்கள்.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!