18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகக் கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை..

முகக் கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை..

எழுதியவர்: mohan June 16, 2020, 3:46 pm

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இதனை தடுக்கும் பொருட்டு இன்று(16.06.2020) முதல் வெளியே வரும் அனைத்து அனைவரும் கட்டாயம் முகக்க்கவசம் அணிந்து வெளியே வர வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். மீறி வரும் நபர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் எனவும் அது இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து  மதுரை மாநகராட்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மதுரை முழுவதும் இன்று பல பகுதிகள் அபராதம் விதித்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக மதுரை திருநகர் கடைவீதி பகுதியில்  சுமார்  20க்கும் மேற்பட்டோர் முக கவசம் அணியாமல் சுற்றி வந்து உள்ளார்கள். சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையில் முக கவசம் அணியாதஅவர்களுக்கு சுமார் ரூபாய் 200 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் சுகாதார ஆய்வாளர் கூறுகையில் சாலையில் வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மீறும் நபர்களுக்கு கட்டாயமாக ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து விதிமீறல் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!