17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குண்டர்களால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளான பத்திரிகையாளர் சாதிக் பாட்சாவை நேரில் சந்தித்து தி.மு.க எம்.எல்.ஏ ஆறுதல்!

குண்டர்களால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளான பத்திரிகையாளர் சாதிக் பாட்சாவை நேரில் சந்தித்து தி.மு.க எம்.எல்.ஏ ஆறுதல்!

எழுதியவர்: Askar June 16, 2020, 1:32 pm

குண்டர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான பத்திரிகையாளர் சாதிக் பாட்சாவை நேரில் சந்தித்து தி.மு.க எம்.எல்.ஏ ஆறுதல்!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சார்ந்தவர் சாதிக் பாட்சா இவர் பத்திரிகையாளர் ஆவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி சேகரித்து விட்டு தேனியில் இருந்து பெரியகுளம் நோக்கி திரும்புகையில் தேனி பைபாஸ் சாலையில் மர்ம நபர்களால் கொடுரமான முறையில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானார்.

கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளான சாதிக் பாட்சா பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தொடர்ந்து அங்கு அவருக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இது சம்மந்தமாக அனைத்துத் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம், தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், உட்பட பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

பல்வேறு பத்திரிகை துறை சார்ந்த நண்பர்களும், உறவினர்களும், சமுதாய அமைப்பினர்களும் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்திலையில் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (திமுக) கே.எஸ்.சரவணக்குமார்  பத்திரிகையாளர் சாதிக் பாட்சாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

மேலும் இவை சம்மந்தமாக கொடுக்கப்பட்ட புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் கூறினார். இந்த சந்திப்பின் போது திமுக பெரியகுளம் நகர துணைச் செயலாளர் அப்பாஸ் கான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் திராவிட முன்னேற்றக் கழக பெரியகுளம் ஒன்றிய செயலாளர் L. M . பாண்டியன் மற்றும் பெரியகுளம் நகர பொருளாளர் முரளி ஆகியோர் நிருபர் சாதிக் பாட்சாவை நேரில் வந்து நலம் விசாரித்தினர்.

அதனைத் தொடர்ந்து இந்தியன் யூனியன் முசுலீம் லீக் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் நூர் முகமது மர்ம நபர்களால் தாக்கப்பட்ட தேனி மாவட்ட நிருபர் சாதிக் பாட்சாவை நேரில் கண்டு நலம் விசாரித்தார்.

மர்ம நபர்களை கண்டு பிடிப்பதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!