17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரத சாரணர் இயக்கம் சார்பில் கொரோனா பேரிடர் கால நிவாரண உதவி முகாம்!

பாரத சாரணர் இயக்கம் சார்பில் கொரோனா பேரிடர் கால நிவாரண உதவி முகாம்!

எழுதியவர்: Askar June 16, 2020, 12:16 am

பாரத சாரணர் இயக்கம் சார்பில் கொரோனா பேரிடர் கால நிவாரண உதவி முகாம்!

திருவண்ணாமலை பாரத சாரண சாரணீயர் இயக்கம் சார்பில் ஆல்பா மறுவாழ்வு மையத்தில் நோயாளிகள் மற்றும் ஏழை எளியோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் குமார், ஹோமியோபதி மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆல்பா முழு வாழ்வு மையத்தின் இயக்குனர் சுதாகர் அனைவரையும் வரவேற்று பேசினார். சாரணர் குழு திருவண்ணாமலை மலை சுற்றும் பாதை மற்றும் நரிகுறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்து கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்தும் பொதுமக்களின் வறுமை நிலை குறித்தும் அறிக்கையைப்பெற்றன.

அதன் தொடர்ச்சியாக சேவை முகாம் பணியில் ஈடுபட்டனர்.200 பயனாளிகள் என அடையாளம் காணப்பட்டு பொதுமக்கள் முதியோர்கள் பெற்றோரை இழந்வர்களுக்கு நோய் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவதற்காக மளிகை பொருட்கள் தொகுப்பு காய்கறி தொகுப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் என்ற ஓமியோ மருந்து கபசுரக்குடிநீர் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள் சோப்புகள் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பலர் நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருவண்ணாமலை கல்வி மாவட்ட பாரத சாரண இயக்க மாவட்டச் செயலர் பியூலா கரோலின் செய்திருந்தார்.குழுவில் மாவட்ட அமைப்பு ஆணையர் அருண்குமார் , மாவட்ட பயிற்சி ஆணையர் கலைவாணி உள்ளிட்டோர் சேவைப் பணியில் ஈடுபட்டனர். ஆல்பா மறுவாழ்வு மையத்தின் நிர்வாக குழு உறுப்பினர் லீலாவதி நன்றி கூறினார் .

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!