17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எங்களுக்கு கொரானா வந்தாலும் பரவாயில்லை “மீன்” தான் முக்கியம் மக்களின் அலட்சியம்!

எங்களுக்கு கொரானா வந்தாலும் பரவாயில்லை “மீன்” தான் முக்கியம் மக்களின் அலட்சியம்!

எழுதியவர்: Askar June 15, 2020, 11:42 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா வைரஸ் அச்சமின்றி மீன் மார்க்கெட்டில் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மீனை வாங்கி சென்ற பொதுமக்கள்.

சிக்கன், மட்டன் விலை உயர்ந்த நிலையில் மீன் விளையையும் உயர்த்திய மீன் வியாபாரிகள்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

தமிழகத்திலும்அதன் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகமாகி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பொதுமக்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில்விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கொரனா வைரஸை பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மீனை வாங்கி செல்கின்றனர்.

மேலும்சிக்கன் மற்றும் மட்டன் விலை உயர்ந்துள்ள நிலையில் பொது மக்கள் மீனை வாங்க ஆர்வம் காட்டி வருவதால் இதைப் பயன்படுத்திக் கொண்ட மீன் வியாபாரிகள் மீன் விலையை உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் வேறு வழியின்றி மீன் வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!