18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மின் கம்பத்தில் மோதி போக்குவரத்து காவலர் பலி;பணிக்கு சென்ற இடத்தில் பரிதாபம்..

மதுரையில் மின் கம்பத்தில் மோதி போக்குவரத்து காவலர் பலி;பணிக்கு சென்ற இடத்தில் பரிதாபம்..

எழுதியவர்: Askar June 15, 2020, 11:11 pm

மதுரையில் மின்கம்பத்தில் மோதி போக்குவரத்து காவலர் பலி;பணிக்கு சென்ற இடத்தில் பரிதாபம்..

மதுரை பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி ராம்,இவர் மதுரை மாநகர தல்லாகுளம் காவல்நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்,

இந்நிலையில் வீட்டிலிருந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி காவல் நிலையம் வந்து கொண்டிருந்தபோது, பனங்காடி செக்போஸ்ட் அருகே குறுகலான சாலையில் தண்ணீர் லாரி ஒன்று முந்தி செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி போக்குவரத்து காவலர் ஜோதிராம் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தார், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட பொதுமக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், அதனைத்தொடர்ந்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்,பணிக்கு வந்த காவலர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சக காவலர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்,வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!