18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் மீனவர் 4 பேர் மாயம் மீட்டு தரக் கோரி போராட்டம்..

இராமேஸ்வரம் மீனவர் 4 பேர் மாயம் மீட்டு தரக் கோரி போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 15, 2020, 9:35 pm

கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு மற்றும் இரண்டு மாத மீன்பிடி தடை காலம் காரணமாக 80 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர், மலர், ஆனந்த், ஜேசு ஆகிய 4 மீனவர்கள் 13.6.2020ல் தொழிலுக்கு சென்றனர்.

நேற்று (14.6.2020) காலை கரை திரும்ப வேண்டிய இவர்கள் நேற்று மாலை வரை கரை திரும்பவில்லை. இதனையடுத்து மாயமான மீனவர்களை இரண்டு படகுகளில், 10 பேர் ராமேஸ்வரம்  மீன்பிடி துறைமுகத்தில் இன்று (15.6.2020) காலை முதல்  தேடத் தொடங்கினர். தற்போது வரை மீனவர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை. இதனால் நான்கு மீனவர்களை மீட்டு தரக்கோரி அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மீன் வளத்துறை அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!