18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் விவசாயிகள் மகிழ்ச்சி

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் விவசாயிகள் மகிழ்ச்சி

எழுதியவர்: mohan June 15, 2020, 6:02 pm

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் நாகப்பட்டினம் ஒழுங்கு முறை விற்பனை செயலாளர் கோ. வித்யா தலைமையில் நடைப்பெற்றது.இந்த ஏலத்தில் இந்திய பருத்தி கழத்தில் இருந்து இளங்கோவன், குட்டி குமார், தஞ்சை மாவட்ட வியபாரி திருமாறன், ராஜவேல், நாகை மாவட்ட வியபாரி கலியமூர்த்தி, செந்தில்வேலன், விழுப்புரம் பழனி, சந்திரன், நாசர் என 15 -க்கும் மேற்ப்பட்ட வியபாரிகள் கலந்து கொண்டனர். இதில், விற்பனை கூட மேற்பார்வையாளர் பாபு முன்னிலையில் ஏலம் நடைபெற்று அதிகபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.55.50க்கும் குறைந்தபட்சவிலை ரூ.39-க்கும் விலை போனது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் 750 விவசாயிகள் 2,300 மேல் மூட்டைகளை கொண்டு வந்து பயன் பெற்றனர். மேலும், வரத்து அதிகமாக உள்ளதால், பருத்தி களைக்கொண்டு வரும் விவசாயிகள் ஏலம் போகும்வரை, குடோனில் வைக்க இடமில்லாமல் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் சுற்றி வைக்கப்பட்டது. மேலும் நாகை மாவட்டத்தில் இயற்கை கால சூழ்நிலையால் எப்பொழுது வேண்டுமானாலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். மேலும் நமது தமிழக அரசானது கூடிய விரைவிலேயே பாதுகாப்பாக விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வியாபாரிகள் விற்பனைக் கூடத்தில் இருந்து எடுத்து செல்லும் வரை பாதுகாப்பாக இருக்க இட வசதியை ஏற்படுத்த வேண்டுமாய் கூறியுள்ளனர்.

இரா.யோகுதாஸ், மதுரை  செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!