17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 1100 குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்

1100 குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்

எழுதியவர்: mohan June 15, 2020, 11:46 am

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 ஊராட்சிகளில் வாழும் 1,100 குடும்பங்களுக்கு பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் கொரோனா நிவாரணம் வழங்கினார்.செம்பனார்கோயில் ஒன்றியம் விளாகம், ஈச்சங்குடி, நெடுவாசல் ஆகிய மூன்று ஊராட்சிகளிலும்  ஏழை எளிய குடும்பங்களுக்கு பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் தனது சொந்த நிதியிலிருந்து 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை நிவாரணமாக வழங்கி துவக்கிவைத்து கொரோனா விழிப்புணர்வு பற்றி விளக்கி எடுத்துரைத்து பாதுகாப்புடன் இருக்குமாறு மூன்று ஊராட்சிகளில் வாழும் கிராம மக்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் நிகழ்ச்சியை விளாகம் ஊராட்சியில் ஐயர் என்கிற கவி முருகன், ஈச்சங்குடி ஊராட்சியில் சிவநந்தினி-சசிகுமார், நெடுவாசல் ஊராட்சியில் தாமோதரன் என இம்மூன்று ஊராட்சிகளிலும் அதிமுக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். உடன் கொத்தங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சதக்கத்துல்லா மற்றும் கழக உறுப்பினர்கள் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பங்கேற்க முடியாத குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் கொரோனா நிவாரணம் வீடு வீடாக வழங்கப்பட்டது.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!