18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோதனைச்சாவடி விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்…

சோதனைச்சாவடி விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்…

எழுதியவர்: ஆசிரியர் June 14, 2020, 10:27 pm

மதுரை மாவட்டம் அரசு இராஜாஜி மருத்துவனையில் சோதனைச்சாவடி விபத்தில் காயமடைந்தவர்களை  வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

மதுரை மாவட்ட நுழைவாயிலான கொட்டாம்பட்டி அடுத்த சூரப்பட்டியில் உள்ள சோதனை சாவடியில் கெரோனா நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுரை மாவட்ட காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது நின்ற வாகனம் மீது பின்னே வந்த சரக்கு வேன் மோதிய விபத்தில் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்கள் காயமடைந்து அரசு இராஜாஜி மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்படுவதை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய், இ.ஆ.ப, ஆகியோர் இன்று (14.06.2020 ) நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டப்போது முன்னே நின்ற மினி சரக்கு வேன் மீது பின்னே அதிவேகமாக மீன் ஏற்றி வந்த வேன் மோதிய விபத்தில் சார்பு ஆய்வாளர் கலா சேகர், தலைமை காவலர் அழகுராஜா, பட்டாலியன் காவலர்கள் சிலம்பரசன் ஈஸ்வரன் அவர்கள் ஆகிய 4 பேர் தூக்கி வீசப்பட்டு தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்துள்ளனர். அங்கிருந்த மற்ற காவலர்கள் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த சார்பு ஆய்வாளர் மற்றும் 3 காவலர்களையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!