மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் உள்ள
மாற்றுத்திறனாளிகள், மற்றும் ஏழை எளிய பொதுமக்கள், சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, அரிசி, பருப்பு காய்கறிகள், அடங்கிய தொகுப்பு பைகளை முக அழகிரி ஆதரவாளர்கள் வழங்கினார். இந்த விழாவில் மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் தெற்குமண்டல தலைவர் கோபிநாத், மதுரை மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ், முன்னாள் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கெளஸ்பாட்ஷா, மதுரை முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் முபாரக்மந்திரி, சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அவர்களது தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தவர்கள் புது ராஜா ,பாண்டிச்செல்வி முருகேசன், ஆகியோர் இந்த விழாவை ஏற்பாடுகள் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகமகாராஜா, தொட்டப்பநாயக்கனூர் 7 வார்டு உறுப்பினர் ராதாசெல்வி ,மற்றும் கோகுல்,ராஜா,மலைச்சாமி, சுரேஷ் ,பால்காலை, சின்ன கருப்பையா, மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு முக அழகிரி ஆதரவாளர்கள் தொட்டப்பநாயக்கனூரில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி.
எழுதியவர்: mohan June 14, 2020, 8:13 pm




You must be logged in to post a comment.