18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலுக்கு சென்ற மீனவர்கள் கொண்டு வந்த மீன்களுக்கு விலையில்லை. மீனவர்கள் கவலை..

கடலுக்கு சென்ற மீனவர்கள் கொண்டு வந்த மீன்களுக்கு விலையில்லை. மீனவர்கள் கவலை..

எழுதியவர்: mohan June 14, 2020, 3:27 pm

மீன் பிடி தடை காலம், கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையால் 80 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி பகுதிகளைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று தினம் மதியம் கடலுக்கு சென்றன. இன்று அதிகாலை முதல் கரை திரும்பினர். மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் எதிர்பார்த்த இறால், நண்டு, கணவாய் போன்ற ஏற்றுமதி ரக மீன்கள் கிடைக்கவில்லை.

இதனால், படகு ஒன்றுக்கு ரூ. 40 முதல் 60 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் கூறினர். டீசல் விலை உயர்வு, கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையால் மீன்பிடி சாதனைங்களின் விலை உயர்வு என கடும் சிரமத்துக்கு இடையில் நேற்று மதியம் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பிடித்து வந்த இறால் மீனுக்கு கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்கள் விலை நிர்ணயிக்காமல் கொள்முதல் செய்தனர். இறால் மீனுக்கு தினசரி விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும். மீனவர்கள் பிடித்து வந்த இறால், கணவாய், நண்டு மீன் ரகங்களுக்கு ஏற்றமதி நிறுவனங்கள் உரிய விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!