18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக போல ஒன்றிணைவோம் வா என தொழிலதிபர்களிடம் வசூல் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கவில்லை.அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி.

திமுக போல ஒன்றிணைவோம் வா என தொழிலதிபர்களிடம் வசூல் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கவில்லை.அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி.

எழுதியவர்: mohan June 14, 2020, 1:36 pm

மதுரை அனுப்பானடியில் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு இலவச அரிசி,காய்கறி, பலசரக்கு,சத்து மாத்திரைகள்,கப சுர குடிநீர்  அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,திமுக போல ஒன்றிணைவோம் வா என மக்களிடம் தொழிலதிபர்களிடம் வசூல் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கவில்லை.எதிர்க்கட்சித்தலைவர் அரசுக்கு நல்ல ஆலோசனையை சொல்ல வேண்டும். மக்களுக்கு அறிவுரை சொல்லலாம். ஆனால் ஸ்டாலின் முதல்வர் மீது தொடர் குற்றசாட்டாக கூறி வருகிறார்.துணைமுதல்வர் மேயராக இருந்துள்ளார் ஸ்டாலின். முதல்வர் தான் எல்லா துறைகளுக்கும் தலைமை. அவர் அனுமதி இல்லாமல் எந்த துறையிலும் அணுவும் அசையாது.

பாஜக தலைவர் ஜெ.பி நட்டா கருத்துக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார் குறித்த கேள்விக்கு,திமுக பொறுத்தவரை நிறம் மாறக்கூடிய கட்சி. ஒரு விலங்கை போல நிறம் மாறக்கூடியவர். திமுகவுக்கு நிரந்தர கொள்கை கிடையாது. ராகுல் பிரதமராக வருவார் எனக்கூறி கடைசியில் காங்கிரஸ் தோற்றது தான் மிச்சம். பிரதமர் வீட்டிற்கு வருகிறார் என்றவுடன் வெளிநாடு சென்ற ஸ்டாலின் பிரதமரை வரவேற்க ஓடோடி வந்தார். பின்னாளில் அவரை மிக மோசமாக விமர்சித்தார்.

முதல்வர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் மீது ஆர்எஸ் பாரதி வழக்கு போட்டுள்ளார் குறித்த கேள்விக்கு,திமுக ஆக்கப்பூர்வமான பணிகளை செய்வதில்லை. வழக்குப்போட்டால் பத்திரிக்கையில் வரும் என்பதால் வழக்கு போடுகிறார்கள்.சாமனிய முதல்வர் மக்கள் முதல்வராக எடப்பாடியார் உள்ளார் என மக்கள் நினைக்கிறார்கள்.அதிமுக எம்எல்ஏவுக்கு கொரானா தொற்று குறித்த கேள்விக்கு,அனைவரும் பாதுகாப்பாக கவனமோடு இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.

சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் நிகழும் என அமமுகவினர் கூறுவது குறித்த கேள்விக்கு,அவர்களுடைய நம்பிக்கையை சொல்கிறார்கள். அடுத்த வேலையை நோக்கி அதிமுக சென்று கொண்டுள்ளோம். தற்போதைக்கு மக்களை கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என உழைத்து கொண்டுள்ளோம் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!