18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம்

எழுதியவர்: mohan June 14, 2020, 12:25 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கொரானா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக வீரர்களுக்கு சிறப்பு ஹோமியோ மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், மற்றும் துணை முதல்வர் செந்தில்குமார், மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹரி டாக்டர்கள் அருண் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் சிறப்பு ஹோமியேர மருத்துவ முகாமில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த துணை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன். உதவி கமாண்டன்ட் சனிஸ்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிறப்பு முகாமில் கலந்துகொண்ட வீரர்களுக்கு ஹோமியோபதியின் “ஆர்சாணிக் ஆல்பம் 30 ” போது என்ற மருந்து வழங்கப்பட்டது.ஹோமியோ மருத்துவ கல்லூரி முதல்வர் வீரர்களுக்கு “ஆர் சானிக் ஆல்பம்” குறித்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான கொரானா நோய் ஏற்படாமல் தடுக்க இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு 300 வீரர்களுக்கும் . அவர்களின் குடும்பத்தினர் 150 பேருக்கும் ஆர்கானிக் ஆல்பம் 30 வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!