17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரொனா நோய்தொற்றை தடுக்கும் விதமாக இறைச்சிக் கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கி ஒருங்கிணைத்த சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாகம்!

கொரொனா நோய்தொற்றை தடுக்கும் விதமாக இறைச்சிக் கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கி ஒருங்கிணைத்த சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாகம்!

எழுதியவர்: Askar June 14, 2020, 9:36 am

கொரொனா நோய்தொற்றை தடுக்கும் விதமாக இறைச்சிக் கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கி ஒருங்கிணைத்த சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாகம்!

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதிகளில் இறைச்சி கடை அமைக்கும் வியாபாரிகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப பேரூராட்சி பகுதிகளில் கடைஅமைத்து வியாபாரம் செய்து வந்தநிலையில் தற்போது நாட்டில் நிலவிவரும் கொரொனா நோய்தொற்றை தடுக்கும் நோக்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலர் முகமது யூசுப் ஆலோசனையின் பேரில் மேஸ்திரி விஜயா மேற்பார்வையில் சித்தையன்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் இறைச்சி வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு 14/06/20 ஞாயிற்றுக் கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் விரும்பும் இறைச்சியை வாங்கிச் செல்வதற்கு ஏதுவாக ஒருங்கிணைத்து உதவிய சித்தையன்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை இறைச்சி பிரியர்கள் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!