கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல அரசு தடை விதித்தது. இதனையடுத்து ஏப் 15 முதல் ஜூன் 15 வரை மீன்கள் இனப் பெருக்க காலமாக கருதி அரசின் வழக்கமான தடை அமலுக்கு வந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்ததால் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மத்திய அரசு உத்தரவு படி , தமிழக அரசு ஜூன் 1 முதல் விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்ல அனுமதித்தது. இது தொடர்பாக ஆலோசித்த ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் ஊரடங்கு காலத்தில் படகுகளை பழுதுபார்க்க பணியாளர்கள் வராததால் பெரும்பாலான படகுகள் பழுது பார்க்கப்படாமல்
உள்ளன. அந்நிய செலாவணி ஈட்டி தரும் இறால் மீன் கொள்முதல் செய்ய முடியாது என ஏற்றுமதி நிறுவனங்கள் தெரிவித்தன. இதனையடுத்து ஜூன் 1-ஆம் தேதிக்கு பதில் ஜூன் 15 முதல் தொழிலுக்குச் செல்ல முடிவு செய்தனர். மல்லிபட்டினத்தில் நடந்த மீனவர் சங்கப்பிரதிநிதிகள் முடிவின்படி, இறால் மீன், ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள்படி 12 மணி நேர மீன்பிடிக்காக விசைப்படகுகள் நேற்று மதியம் தொழிலுக்குச சென்றன. இந்நிலையில், மீன் பிடி அனுமதி சீட்டு பெற்ற மீனவர்கள் 80 நாட்களுக்கு பின் இன்று (ஜூன் 13) மதியம் ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். டீசல் விலை உயர்வு, மீன் பிடி சாதனைங்கள் விலை உயர்வு என கடும் சிரமத்திற்கு இடையில் இன்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
80 நாட்களுக்கு பின் தொழிலுக்கு சென்ற ராமேஸ்வரம், மண்டபம் விசைப்படகுகள்
எழுதியவர்: mohan June 13, 2020, 2:50 pm




You must be logged in to post a comment.