17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி குட்டி நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்!

40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி குட்டி நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்!

எழுதியவர்: Askar June 12, 2020, 11:22 pm

40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி குட்டி நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்!

மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு இன்று மாலை ஒரு அழைப்பு வந்தது அதில் அண்ணாநகர் பகுதியில் சுமார் 40 அடி ஆழத்தில் கிணற்றில் ஒரு குட்டி நாய் விழுந்ததாக தகவல் வரவே, சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் தங்கள் உயிரை துச்சமென நினைத்து சுமார் 40 அடி ஆழத்திலுள்ள கிணற்றுக்குள் இறங்கி குட்டி நாயை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.

குட்டி நாய் என்று எண்ணாமல் சம்பவ இடத்திற்கு விரைந்து அதுவும் ஒரு உயிர் தான் என அவர்களும் மனிதர்களைப் போல தான் அதுவும் ஒரு உயிருள்ள ஜீவன் தான் எனவும் அதைக் காப்பாற்றுவது எங்கள் கடமையாகும் என தெரிவித்தனர்.

குட்டி நாயை காப்பாற்றியது அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினரரை வெகுவாக பாராட்டினார்கள்.

செய்தியாளர், வி. காள மேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!