18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நின்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நின்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

எழுதியவர்: mohan June 12, 2020, 5:27 pm

மதுரை தல்லாகுளம் பகுதியில் மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இந்த அலுவலகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் பணியாற்றி வரும் வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்,இந்த அலுவலகத்தின் வளகத்தில் உள்ளே இருக்க கூடிய கார் பார்க்கிங்கில் அரசு அதிகாரியை அழைத்து சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுவது வழக்கம்,இந்த நிலையில் அங்கு நிறுத்தப்பட்ட காரின் முன்பகுதி ஏற்பட்ட புகை திடீரென தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது,அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்,விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர்,இருப்பினும் கார் முழுமையாக எரிந்து நாசமானது,இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!