17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருடுபோன மற்றும் காணாமல் போன மொபைல் போன்கள் உரிய நபரிடம் ஒப்படைத்த போலீசார்.

திருடுபோன மற்றும் காணாமல் போன மொபைல் போன்கள் உரிய நபரிடம் ஒப்படைத்த போலீசார்.

எழுதியவர்: mohan June 12, 2020, 10:26 am

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், உத்தரவின் பேரில் கடந்த 03.08.2018ம் ஆண்டு போலீஸ் சைபர் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 3,32,298/- மதிப்புள்ள 30 மொபைல் போன்களும், காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.24,33,318/- மதிப்புள்ள 218 மொபைல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நூதன முறையில் மோசடி செய்த சம்பவங்களில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை ரூ.6,48,908/- உரிய நபர்களின் வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வங்கியில் இருந்து பேசுவது போல் மோசடி செய்யும் நபர்களிடம், விழிப்புணர்வோடு இருக்கவும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன். அறிவுறுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!