17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கன்னிவாடி பகுதியில் ஊரடங்கு காலத்தில் செயல்படாத ATM மிஷின்கள் கண்டுகொள்ளாத வங்கி நிர்வாகம்!

கன்னிவாடி பகுதியில் ஊரடங்கு காலத்தில் செயல்படாத ATM மிஷின்கள் கண்டுகொள்ளாத வங்கி நிர்வாகம்!

எழுதியவர்: Askar June 11, 2020, 10:30 pm

கன்னிவாடி பகுதியில் ஊரடங்கு காலத்தில் செயல்படாத ATM மிஷின்கள் கண்டுகொள்ளாத வங்கி நிர்வாகம்!

திண்டுக்கல் தாலுகா கன்னிவாடி பகுதியில் ஸ்டேட் பேங்க் சார்பாக இரண்டு ATM மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் அப்பகுதி வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கிக்குள் செல்லாமல் பணம் எடுப்பதற்கு மிகவும் உதவியாக இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக ATM மையம் செயல்படாமல் உள்ளதால் அப்பகுதி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வங்கிக்கு செல்லும் நிலை உள்ளது. வங்கி மேலாளரிம் பலமுறை சொல்லியும் கண்டுகொள்ளாத நிலைதொடர்வதாக கூறப்படுகிறது. ஆகவே, வங்கி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கொரொனா நோய்தொற்று பரவிவரும் நிலையில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக வங்கிக்குள் வந்து செல்வதை தவிர்க்கும் விதமாக ATM மையம் செயல்படுவதற்கான ஏற்பாடு செய்துதந்து உதவுமாறு அப்பகுதி வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!