18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகக்கவசம் அணியாதவர்களிடம் கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலிப்பு..

முகக்கவசம் அணியாதவர்களிடம் கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் June 11, 2020, 6:06 pm

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது அதே போல் தமிழகத்திலும் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. குறிப்பாக அனைவரும் முகக்கவசம், கையுறை சமூக இடைவெளி ஆகியவை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பாக சுகாதாரத்துறை ஆய்வாளர் பூபதி, கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் தங்ககிருஷ்ணன் மற்றும் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி, உதவியாளர் பாலா, ஆகியோர் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்ததுடன், ஒரு முகக்கவசத்தையும் வழங்கினர்.

கீழை நியூஸ் S.K.V முகம்து சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!