இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காந்தி நகர்- ஓடைத்தோப்பு அருகே காட்டு கருவேல் காட்டு பகுதியில் இன்று மதியம் 2:15 மணியளவில் வயதான ஒரு ஆண், ஒரு பெண் இறந்து
கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி மண்டபம் போலீசார் சம்பவம் இடம் விரைந்து உடல்களை மீட்டனர். விசாரணையில், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பெத்தூரைச் சேர்ந்த சுப்ரமணி 73, இவரது மனைவி சாந்தி 64 என தெரிந்தது. கயறு கட்டில் பின்னுதல் தொழில் செய்து வந்த இவர்கள் குடும்ப பிரச்னையால் நேற்று முன் தினம் இரவு வீட்டில் கோபித்து கொண்டு வெளியேறினர். வாழ்வாதாரம் இல்லாததால் விஷம் குடித்து இறந்தது தெரிந்தது. இது தொடர்பாக எஸ்ஐ., முத்து முனியசாமி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
மண்டபம் அருகே விஷம் குடித்து மதுரை தம்பதி தற்கொலை
எழுதியவர்: mohan June 11, 2020, 5:48 pm




You must be logged in to post a comment.