17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெருமாள்கோவில்பட்டியில் ஷேர் ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலி

பெருமாள்கோவில்பட்டியில் ஷேர் ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலி

எழுதியவர்: mohan June 11, 2020, 2:24 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி (56) என்பவர் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக ஷேர் ஆட்டோவில் சேடபட்டிக்கு சென்றுள்ளார். அப்போது பெருமாள்கோவில்பட்டி அருகில் ஷேர் ஆட்டோ மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஆண்டிச்சாமிக்கு பலத்த காயம் ஏறப்;பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் சேடபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சேடபட்டி போலிசார் சம்பவஇடத்திற்கு சென்று ஆட்டோவிலிருந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமணைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்குபப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!