மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி அருகே மொட்டை மலை பகுதியில் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவர் நள்ளிரவில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து ஆஸ்டின் Uட்டி போலீசார் மனைவியை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.மேலும் கள்ளக்காதல் விவகாரமா? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம் விளாச்சேரி அருகே மொட்ட மலை பகுதியையை சேர்ந்தவர் கருப்பையா(42) இவருக்கு பொன்னம்மாள்(32) என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் வளையல் வியாபாரம் செய்து வந்தார்.
இவர் நேற்று இரவு வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்தார் இந்நிலையில் இன்று அதிகாலையில் இவருடைய மனைவி பொன்னம்மாள் வெளியே வந்து பார்த்தபோது கணவன் கழுத்து நெரித்து இறந்ததாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார் .தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலிஸரின் முதல் கட்ட விசாரணையில் பொன்னம்மாளுக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் மனைவி பொன்னம்மாள் மற்றும் ஆறுமுகத்தை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.மேலும் கொலை கள்ளக்காதலுக்காக நடந்ததா இல்லை வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.