17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவு. நாகை மயிலாடுதுறை கழகப் பொறுப்பாளர்கள் அஞ்சலி

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவு. நாகை மயிலாடுதுறை கழகப் பொறுப்பாளர்கள் அஞ்சலி

எழுதியவர்: mohan June 11, 2020, 10:57 am

மயிலாடுதுறைய அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் சென்னை மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் உருவ படத்திற்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் உடன், மயிலாடுதுறை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், கழக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராம சேயோன், நகர கழக செயலாளர் குண்டுமணி என்கிற செல்வராஜ், மலைக்கோட்டை பிரபாகரன், வின்சென்ட் மற்றும் மயிலாடுதுறை நகர கழக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

அதேபோன்று, செம்பனார்கோயில் ஒன்றியத்துக்குட்பட்ட உத்திரங்குடி ஊராட்சி சங்கரன்பந்தல் கடைவீதியில் அமைக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உருவப்படத்திற்கு செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.மேலும் நிகழ்ச்சியில், திமுக செம்பை வடக்கு ஒன்றிய சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம் எம் சித்திக், ஒன்றிய கவுன்சிலர் சகிலா அஜீஸ், ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேஷாக், கே.எஸ்.கருணாநிதி மற்றும் திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!