18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மயிலாடுதுறை மாவட்டத்தில் சூறைக் காற்று வீசியதில் 10 ஏக்கர் வாழை மரம் அடியோடு சாய்ந்தது. அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சூறைக் காற்று வீசியதில் 10 ஏக்கர் வாழை மரம் அடியோடு சாய்ந்தது. அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

எழுதியவர்: mohan June 11, 2020, 10:43 am

மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழையூர், கிடாரம்கொண்டான், செம்பனார்கோவில் , ராதாநல்லூர், அள்ளிவிளாகம், உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் இலை, வாழைத்தார் உரிய விலை கிடைக்காததால் கடந்த இரண்டு மாதங்களாக வாழை விவசாயம் முற்றிலும் அழிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இரவு சாரல் மழையுடன் கூடிய சூறாவளி காற்று வீசியதில் சுமார் 10 ஏக்கரில் வாழை மரம் அடியோடு சாய்ந்துவிழுந்தது.இதனால் வாழை விவசாயிகள் வேதனையில் உள்ளனர் வாழை விவசாயத்திற்கு வங்கிகளில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ள நிலையில் அரசு உரிய இழப்பீடு தரவேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!