18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆசிரியர் உள்பட இருவர் கைது. தலைமறைவான பெண்ணுக்கு போலீஸ் வலை

பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆசிரியர் உள்பட இருவர் கைது. தலைமறைவான பெண்ணுக்கு போலீஸ் வலை

எழுதியவர்: mohan June 11, 2020, 10:02 am

இராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் துளசி மணிகண்டன், 36.தனியார் நிறுவன விற்பனை மேலாளரான இவருக்கும், சாயல்குடி அருகே தத்தங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்த் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. தனது நண்பர் ஒருவர் சென்னையில் நடத்தி வரும் நிதி நிறுவனம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதன் பின்னர் நிதி நிறுவன உரிமையாளர் நீதிமணியின் மனைவி மேனாகாவை அழைத்து வந்து ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்வோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் லாபம், ஏஜன்ட்களுக்கு ரூ.2 ஆயிரம் கமிஷன் தொகை கிடைக்கும் என முதலீடுகள் சேகரித்தார். இதன்படி, துளசி மணிகண்டன் தனது மனைவி பெயரில் ரூ.12 லட்சத்தை 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலீடு செய்தார். இதை தொடர்ந்து துளசி மணிகண்டன் தனது உறவினர்கள், அரசு அலுவலர்கள், டாக்டர்கள் என 58 பேரிடம் 2018 முதல் மார்ச் 2020 வரை ரூ.3 கோடி முதலீடு திரட்டி கொடுத்தார். 2019ஆம் ஆண்டு முதல், முதலீடுகளுக்கு லாபம் தருவதை நிதி நிறுவனம் நிறுத்தியது. இதனால் தன்னிடம் பண மோசடி செய்வதை உணர்ந்த துளசி மணிகண்டன், காந்தாரி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஆசிரியர் ஆனந்த் வீட்டிற்குச் சென்றார். முதலீடு செய்த தொகையை திரும்ப தருமாறு அங்கிருந்த நீதிமணி, ஆனந்த், நீதிமணியின் மனைவி மேனகா ஆகியோரிடம் துளசி மணிகண்டன் கேட்டார். பணம் தர முடியாது எனக் கூறிய நீதிமணி உள்பட 3 பேரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் துளசி மணிகண்டன் புகார் அளித்தார். இதன் படி ஆசிரியர் ஆனந்த் உள்பட 3 பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமணி 42, ஆனந்த் 36, ஆகியோரை கைது செய்து, தப்பியோடிய மேனகாவை தேடி வருகின்றனர். இருவரின் தகவல் படி ரூ.25 லட்சம் நகைகள், ரூ.25 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தாக போலீசார் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!