17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கோரி இந்து முன்னணியினர், பழனி மலைக்கோவில் முன் ஒற்றை காலில் நின்று போராட்டம்!

பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கோரி இந்து முன்னணியினர், பழனி மலைக்கோவில் முன் ஒற்றை காலில் நின்று போராட்டம்!

எழுதியவர்: Askar June 10, 2020, 6:32 pm

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணியினர் பழனி மலைக்கோவில் முன் ஒற்றை காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடைவிதித்து அரசு உத்தரவிட்டுள்ளது‌.

தற்போது ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்களுக்குள்‌ பக்தர்களை  சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி பழனியில் இந்துமுன்னனி சார்பில் போராட்டம்‌ நடைபெற்றது. பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட கோவில் வாசல்களில் ஒற்றை காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள்‌ தெரிவித்ததாவது,

கட்டுப்பாடுகள் விதித்து மதுபானக் கடைகளை அரசு திறந்திருக்கும் போது, கோவில்களுக்கு தடை விதித்திருப்பது சரியல்ல என்றும், கோவிலுக்கு செல்ல சில விதிகளை விதித்து கட்டுபாடுகளுடன் பக்தர்களை உள்ளே அனுமதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கவேண்டும் என்று கோரி இந்து முன்னணியின் ஒற்றை காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் திறக்கவில்லை என்றால் எங்களின் போராட்டம் தொடரும் என்று கூறினார்கள்.

இந்நிகழ்சசியில் இந்து முன்னனி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!