18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்ட நகல் எரிப்பு போராட்டம்

சட்ட நகல் எரிப்பு போராட்டம்

எழுதியவர்: mohan June 10, 2020, 4:43 pm

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் தலைமையில் நடைப்பெற்றது.மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு விரோதமான அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் டி.இராசையன், மயிலாடுதுறை வட்ட செயலாளர் டி.இராயர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், விவசாய சங்க வட்ட செயலாளர் காபிரியேல், வட்டத்தலைவர் பரமசிவம், மாதர் சங்க வட்ட செயலாளர் ராணி, வாலிபர் சங்க வட்ட செயலாளர் கே.மார்க்ஸ், வட்டத்தலைவர் பரமசிவம், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

அத்தியாவசியப்பொருட்கள் தடைசட்டத்தை நீக்காதே, அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய், விவசாயிகளுக்கு விரோதமான அவசரச்சட்டம் 2020 ஐ திரும்ப பெறு உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கமிட்டு நடத்திய போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துங்கொண்டனர். முன்னதாக கண்டன முழக்கமிட்டு பேரணியாக வந்து சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!