18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடு பாலத்தில் பழுதாகி நின்ற வாகனத்தால் நொிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் .

நடு பாலத்தில் பழுதாகி நின்ற வாகனத்தால் நொிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் .

எழுதியவர்: mohan June 10, 2020, 1:26 pm

மதுரை பைபாஸ் சாலை பழங்காநத்தம் காளவாசல் போடி லயன் மேம்பாலத்தில்  காலை 9 மணி அளவில் காளவாசல் பகுதியில் இருந்து மினி வேன் ஒன்று அதிக பாரத்துடன் பழங்காநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மேம்பாலத்தில் ஏறும்பொழுது ஆக்சில் பிடுங்கி உள்ளது. எனினும் டிரைவரின் சாமர்த்தியத்தால்  வாகனத்தை எதிர்ப்புறமாக பாலத்தில் ஏற்றி நிறுத்தியுள்ளார்… இதனால் பாலத்தில் இருந்து இறங்கி வரும் வாகன ஓட்டிகள் மீது மோதாமல் விபத்து தவிர்க்கப்பட்டது .உடனடியாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேசனுக்கு  தகவல் தெரிவிக்கவே விரைந்து செயல்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஈடுபட்டனர். பின் அரை மணி நேர போராட்டத்திற்கு வாகனத்தை மெதுவாக பின்னோக்கி பாலத்தில் இருந்து கீழே இறக்கினார்கள். போக்குவரத்து காவல்துறையினர் துரித செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்ததால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!