18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்கள் .

திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூக இடைவெளியின்றி கூடிய பொதுமக்கள் .

எழுதியவர்: mohan June 10, 2020, 11:43 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா 84 வது வார்டு பகுதியில் உள்ளது சிந்தாமணி. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இப்பகுதியிலுள்ள மக்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அதிகமான கூட்டம் காணப்படுகிறது.அதில் சமூக இடைவெளி விடாமல் முக கவசம் அணியாமல் மக்கள் அதிகளவில் கூறுகின்றனர். மருத்துவ சீட்டுகள் பதியுமிடம், மாத்திரைகள் வாங்குமிடம் ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடுகின்றனர்.நோயை தடுக்க வேண்டிய சுகாதாரத் துறையின் மருத்துவமனையிலேயே நோய் பரப்பும் அவல நிலை இருப்பதால் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் என சிந்தாமணி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!