திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் , ஊராட்சி செயலாளர்களுக்கும் கொரோனா தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிலக்கோட்டை
ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதி பேசியதாவது: உலக சுகாதார அமைப்பு வருகின்ற காலங்களில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நமது பகுதிகளில் தீவிரமாக கொரானா என்ற தொற்று நோய் தீவிரமாக பரவும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. தற்போது தளர்த்தப்பட்டு உள்ள விதிகள் மக்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து மக்களின் பொருளாதார நிலையை உணர்ந்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக மிகவும் முன்னெச்சரிக்கை இல்லாமல் அலட்சியமாக பொதுமக்கள் இருந்துவிடுவார்கள் ஆகையால் கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சி செயலாளர்களும், ஊராட்சி மன்றத் தலைவர்களும், வார்டு உறுப்பினர்களும் மற்றும் சண்முக ஆர்வலர்களும் இணைந்து வருகின்ற காலத்தில் மிகத் தீவிரமாக பரவக்கூடிய கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தற்போது இருந்தே தினம்தோறும் மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் குடி நீரை சுத்தமாக வழங்குதல் உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும், அதே சமயம் வெளி மாவட்டங்களில் இருந்து யாரும் கிராமப்புறங்களில் நுழைந்தால் உடனடியாக வருவாய்த்துறை ஊரக துறை மருத்துவத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி அலுவலக மேலாளர் ராஜ்மோகன் நன்றி தெரிவித்தார்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா




You must be logged in to post a comment.