18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்தியதாக வாலிபர் ஒருவருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம்!

சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்தியதாக வாலிபர் ஒருவருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம்!

எழுதியவர்: Askar June 10, 2020, 7:46 am

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்தியதாக வாலிபர் ஒருவருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பிய வனத்துறையினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் மலைக்குள் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக சாப்டூர் வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரது தலைமையில் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அணைக்கரை பட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற இளைஞர் டிராக்டர் மூலம் மணல் அள்ளிய நிலையில் வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்தியதாக வனத்துறையின் அவரை கைது செய்தனர்.

பின்புஅவருக்கு அபராதம் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!