17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரொனா பாதிப்பு நிவாரணம் வழங்கக்கோரி இடசாரி கட்சிகள் சார்பாக நிலக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

கொரொனா பாதிப்பு நிவாரணம் வழங்கக்கோரி இடசாரி கட்சிகள் சார்பாக நிலக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

எழுதியவர்: Askar June 9, 2020, 9:46 pm

கொரொனா பாதிப்பு நிவாரணம் வழங்கக்கோரி இடசாரி கட்சிகள் சார்பாக நிலக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

கொரோனா நோய்தொற்று பரவலால் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பாக நடைபெற்றுவரும் ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக 09/06/20 செவ்வாய் கிழமை இன்றுகாலை 10 மனியளவில் நிலக்கோட்டையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட குழு உறுப்பினர் வ.கல்யாண சுந்தரம் கலந்து கொண்டார்.

இதில் சிறு, குறு, நடுத்தர தொழில் புரிவோருக்கு ரூபாய் 10 லட்சம் கடன் வழங்கக்கோரியும் நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்திட கோரியும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூபாய் 7500-ம் மாநில அரசு ரூபாய் 5000 வழங்கிட வேண்டி கைகளில் பதாகைகள் ஏந்தியபடி கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அனிந்து சமூக இடைவெளியை பின்பற்றினர்.

-திண்டுக்கல், பக்ருதீன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!