17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை கூத்தியார்குண்டு கூட்டுறவு சங்கம் சார்பாக  விவசாயகளுக்கு கடனுதவி!

மதுரை கூத்தியார்குண்டு கூட்டுறவு சங்கம் சார்பாக  விவசாயகளுக்கு கடனுதவி!

எழுதியவர்: Askar June 9, 2020, 9:42 pm

மதுரை கூத்தியார்குண்டு கூட்டுறவு சங்கம் சார்பாக  விவசாயகளுக்கு கடனுதவி!

கொரானா எதிரொலியால் நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்குவதற்கு தமிழக அரசு விட்டிருந்தது.

அதனடிப்படையில் மதுரை மாவட்டம் கூத்தியார் குண்டு, நிலையூர் போன்ற பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் ரூ.17 லட்சம் மதுரை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, நிலையூர் கூட்டுறவு வங்கி தலைவர் முருகன், மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு வழங்கினர்.

இதில் மலர் சாகுபடி, மற்றும் தானியங்கள் சாகுபடி செய்துள்ள நிலையூர், சம்பங்குளம், கூத்தியார்குண்டு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 18 நபர்களுக்கு 14 லட்சத்து 76 ஆயிரத்து 810 ரூபாயும், 18 நபர்களுக்கு உரம் வாங்குவதற்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 392 ரூபாயும் ஆக மொத்தம் 16 லட்சத்து 84 ஆயிரத்து 202ரூபாய் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாய கடன் வழங்கப்பட்டது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!