18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததை வரவேற்கிறேன்:-மு.க.ஸ்டாலின்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததை வரவேற்கிறேன்:-மு.க.ஸ்டாலின்!

எழுதியவர்: Askar June 9, 2020, 6:11 pm

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததை வரவேற்கிறேன்:-மு.க.ஸ்டாலின்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்ததற்காகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்காகவும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மனப்பூர்வமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதையும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!