17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்: தமிழக முதலமைச்சருக்கு நன்றி:- (WJUT) “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்”!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்: தமிழக முதலமைச்சருக்கு நன்றி:- (WJUT) “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்”!

எழுதியவர்: Askar June 9, 2020, 5:41 pm

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்: தமிழக முதலமைச்சருக்கு நன்றி:- (WJUT) “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்”!

கொரானா நோய் தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் கூறி வந்த நிலையில், அனைத்தையும் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று அறிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் ஒரு கோரிக்கையையும் முன் வைக்கின்றோம்!

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரானா தொற்று அதிகளவில் பரவி வரும் சூழ்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் உடனடியாக கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அந்தந்த மாவட்டங்களில் வசிக்கக்கூடிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமெனவும், மேலும் கொரானா தொற்று பரிசோதனைகளையும், அதற்குண்டான செலவுகளையும், அரசாங்கமே ஏற்றுக்கொண்டு தேவைப்படும் மக்களுக்கு இலவசமாக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் (WJUT) “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்.

இவன்;

அ.ஜெ. சகாயராஜ், மாநிலத் தலைவர்.

பா.பிரதீப்குமார், மாநிலப் பொதுச் செயலாளர்.

டி.இளையராஜா, மாநிலப் பொருளாலர்.

ஜெ.அஸ்கர், மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர்.

தமிழ் நாடு உழைக்கும்  பத்திரிகையாளர் சங்கம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!