18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் கொரானோ நிவாரண நிதி வழங்கிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

செங்கத்தில் கொரானோ நிவாரண நிதி வழங்கிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

எழுதியவர்: Askar June 9, 2020, 5:27 pm

செங்கத்தில் கொரானோ நிவாரண நிதி வழங்கிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சார்பில் கொரானோ நிவாரண நிதி வழங்கிட வலியுறுத்தி சிபிஐ ஒன்றிய செயலாளர் எஸ். சர்தார், சிபிஎம் ஏ. லட்சுமணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு எம். எஸ். மாதேஸ்வரன், எஸ். ராஜா, ஆர். தங்கமணி. எம். முத்துசாமி. பி. சரவணன். விஜய்பாபு. பி. இ. வஜீர்பாஷா மற்றும், சிபிஎம் பி. கணபதி,ஏ நடராஜன் உட்பட பல கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கொரானா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்தியஅரசு ரூ.7500 உடனடியாக வழங்கிட வேண்டும் , ரேஷன் பொருட்களை ஊழல் முறைகேடுகளை தடுத்து அனைத்துப் பொருட்களும் முறையாக வழங்க உத்தரவாதம் கொடுக்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை 200 நாட்களாகவும் கூலி ரூ.600 உயர்த்தி வழங்கிட வேண்டும், மத்திய அரசு மாநிலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும், கொரோனா பரவலை அதிகரித்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை மையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

30க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை செங்கம் காவல் துறையினரால் செய்யப்பட்டனர்.

செய்தியாளர் ,செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!