17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் சுகாதார பணிகள்-உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் நேரில் ஆய்வு..

நெல்லையில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் சுகாதார பணிகள்-உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் நேரில் ஆய்வு..

எழுதியவர்: Askar June 9, 2020, 5:22 pm

நெல்லையில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் சுகாதார பணிகள்-உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் நேரில் ஆய்வு..

நெல்லையில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் சுகாதார பணிகள் மற்றும் ஆய்வு நடைபெற்றது. சுகாதார பணிகளை நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சதிஷ் குமார் ஆலோசனையின் படி பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில் நடைபெறும் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் நடராஜன், மேற்பார்வையாளர் முருகன் உடன் இருந்தனர்.

பாளையங்கோட்டைபகுதியில் விடைத்தாள் திருத்தும் மையமான தூய யோவான் மேல்நிலை பள்ளியில்சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிக்குவருகை தரும் ஆசிரியர்களுக்கு வெப்ப சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி கைகளில் தெளித்தல், சமூக இடைவெளி பின்பற்ற அறிவுறுத்துதல் ஆகிய கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தினசரி வகுப்பு அறைகளை கிருமி நாசினி தெளித்து கொசு ஒழிப்பு புகை மருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது.

நவீன இயந்திரம் மூலமாக பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க பட்டு வருகிறது. இந்த சுகாதாரபணிகளை உதவி ஆணையர் நேரில் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!