18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

மேட்டுப்பாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

எழுதியவர்: Askar June 9, 2020, 5:16 pm

மேட்டுப்பாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் S. பாஷா தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ராஜன் மூத்த தோழர் சித்திக் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது சாலையோர சிறு வியாபாரிகளுக்கு வங்கிகள் வட்டி இல்லா கடன் உடனடியாக வழங்க வேண்டும்,

கொரோனா பரிசோதனை மையங்களை தமிழகத்தின்மேலும் விரிவுபடுத்த வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் தொழிலாளர்களுக்கு இலவச பரிசோதனை செய்ய வேண்டும்.

சுய உதவி குழுவில் கடன் பெற்றுள்ள ஏழை எளியவர்கள் இடமும் பெண் வியாபாரிகளிடம் சம்பந்தப்பட்ட மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தினர், வட்டியுடன் நிலுவைத் தொகையை அடைக்க, கட்டாய படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரியும்,

மின்வாரிய கணக்கெடுப்பு முறைகேடுகளை தடுத்து நிறுத்தக் கோரியும்,

நியாய விலைக் கடைகளில் அரசு அறிவித்துள்ள பொருட்களை முறைகேடு இல்லாமல் வழங்கக்கோரியும்,

அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்து வாடும் தொழிலாளர்களுக்கு, சிறு வியாபாரிகளுக்கும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு ரூ. 7500 ம், மாநில அரசு ரூ. 5000 ம், சேர்த்து ரூ. 12 500. ஆறு மாதத்திற்கு வழங்க வேண்டும். விவசாயிகளின் விலை பொருட்களை அரசே நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். மாணவர்களின் கல்வி கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க மேலும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது. மின்சார திட்டம் 2020 ஐ உடனை ரத்து செய்ய வேண்டும். 2018 – 2019 க்கான பயிர்க்காப்பீடு செய்து இதுவரை பாக்கியுள்ள விவசாயிகளுக்கும், 2019 – 2020 பயிர்க்காப்பீடு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சிஐடியு தொழிற்சங்க பொறுப்பாளர்கள், ராஜ சாகுல்ஹமீது, சபரி கிரிசன், பதுருதீன், முஜிபூர் ரகுமான், சென்னிஅம்மா, ஆனந்தி, வசந்தா, லட்சுமி, உள்ளிட்ட தொழிலாளர்கள், சமூக இடைவெளியுடன், ஆர்ப்பாட்டம் செய்தனர்,

இதே கோரிக்கையை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு CPIM ,CPI , கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!