17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 32 ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் கூட்டம்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 32 ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் கூட்டம்!

எழுதியவர்: Askar June 9, 2020, 9:28 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட 32 ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பின் கூட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊராட்சி தலைவர்களை ஒன்றிணைத்து ஊராட்சி பணிகளை செம்மையாக செயல்படுத்தவும் பொதுமக்களின் தேவையறிந்து உடனுக்குடன் உள்ளாட்சி பணிகளை விரைந்து முடிக்கவும் ஊராட்சி தலைவர்களிடையே ஒரு தலைமையை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் அரசுத்துறை சார்ந்த சலுகைகளை பெறுவது மற்றும் ஒன்றியத்தில் நடைபெறும் பணிகள் குறித்து உடனுக்குடன் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதில் பி.செட்டிஹள்ளி ஊராட்சி தலைவர் கணபதி அவர்களை ஊராட்சி கூட்டமைப்பு தலைவராக தேர்தேடுத்தனர்.  இதில் தலைவர் கணபதி, செயலாளர் மதிவாணன், பொருளாளர் வளர்மதி சின்னவன், துணைத்தலைவர் குட்டி (எ) முனிராஜ், துணை செயலாளர் நாராயணசாமி மற்றும் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

-சிங்காரவேலு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!