17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளத்தில் OBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை மாற்றக்கூடாது என மத்திய மாநில அரசைக் கண்டித்து விசிக சார்பாக போராட்டம்!

பெரியகுளத்தில் OBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை மாற்றக்கூடாது என மத்திய மாநில அரசைக் கண்டித்து விசிக சார்பாக போராட்டம்!

எழுதியவர்: Askar June 9, 2020, 1:31 am

பெரியகுளத்தில் OBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை மாற்றக்கூடாது என மத்திய மாநில அரசைக் கண்டித்து விசிக சார்பாக போராட்டம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் மருத்துவக் கல்வியில் உள்ள இட ஒதுக்கீட்டை மாற்றக் கூடாது என மத்திய மாநில அரசை கண்டித்து பெரியகுளம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமையில் கண்டன ஆர்பபாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நிரந்தரமான சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சிகளின் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் , மாவட்ட பொருளாளர் ரபீக் , மாவட்ட துனைச் செயலாளர் வழக்கறிஞர சிவனேசன் , தொழிலாளர் ஆண்டவர் , மணிபாரதி மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டார்கள்.

A. சாதிக் பாட்சா, நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!